×

முருகனுக்கு ஒரு நாள் திருநாள் வைகாசி விசாக திருவிழா

ராமநாதபுரம், மே 19: ராமநாதபுரம் நகரில் குண்டுக்கரை முருகன் கோயிலில் வைகாசி விசாகத்  தேரோட்டம் காலையில் நடைபெற்றது. சேதுபதிநகர் வேலவர் கோயில், கழுவூரணி  வேலவர் கோயில், குயவன்குடி சுப்பையா கோயில், திருப்புல்லாணி பஞ்சந்தாங்கி  முருகன் கோயில், குப்பச்சி வலசை முருகன் கோயில் ஆகியவற்றில் பால்குடம் எடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அனைத்து  கோயில்களிலும் அன்னதானமும்  வழங்கப்பட்டது.
வெளிப்பட்டணம்  ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமானோர்  கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். தேவிபட்டிணத்தில் உள்ள முருகன் கோயிலில்  பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாவட்டத்தில்  சத்திரக்குடி, பரமக்குடி, கமுதி உள்ளிட்ட இடங்களிலும் முருகன் கோயில்களில்  சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

Tags : festival ,Murugan ,Tirunelveli Vishaka ,
× RELATED இளையான்குடியில் திருச்செந்தூர் பக்தர்களுக்கு மாற்று மதத்தினர் வரவேற்பு